• Jul 18 2025

என்னதான் கலாய்த்தாலும்.. எதிர்பார்ப்பைத் தாண்டிய சாதனை.! கோடிக்கணக்கில் குவியும் வசூல்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் கனவு கூட்டணிகளில் ஒன்றான கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்து உருவாக்கிய ‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்த ஜூன் 5ம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் ஒரு அரசியல், சமூகம் மற்றும் புரட்சிகளை மையமாகக் கொண்டது என்ற பீலோடு வந்திருந்தாலும், வெளியான பின்பு அவை எதிர்பார்த்த அளவு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை என்பது உண்மை.


மணிரத்னம் தனது படங்களில், குறிப்பாக சமூக கருத்துகளையும், மனித உணர்வுகளையும் கூறும் அதிசயமான சாயலை எப்போதும் வைத்திருப்பவர். ‘தக் லைஃப்’ என்ற பெயரே ஒரு நவீன காலத்தைப் பேசும் புரட்சிக் குரலை உருவாக்கும் அளவுக்கு ஹைபாக இருந்தது. ஆனால் படம் வெளியானவுடன், ரசிகர்களிடையே ஒரு பிளவு ஏற்பட்டது. ஒரு பகுதி ரசிகர்கள் இந்தப் படத்தில் ஆழ்ந்த கருத்துகள் இருப்பதை உணர்ந்தாலும், இன்னொரு பகுதி படம் மிகவும் மந்தமாக போகிறது, நெடுந்தொடராக தெரிகிறது, ஆக்சன் மாஸ் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.


படத்திற்கு வந்த விமர்சனங்கள் நேர்மறையா.? இல்லையா.? என்ற கேள்விக்கு பதிலாக, வசூல் இதுவரை சாதனைப் பாதையில் பயணிக்கிறது என்பது அசைக்க முடியாத உண்மை. படம் வெளியான முதல் நாளிலேயே 25 கோடிக்கும் மேலான வசூல், இரண்டாவது நாளில் 27 கோடி என மொத்தமாக 52 கோடி வசூலை இரண்டு நாட்களில் பதிவு செய்துள்ளது.

இது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனை என்றே கூறலாம். விமர்சனம் எதிர்மறையாக இருந்தாலும், கமலின் பெயர், பிரமாண்ட தயாரிப்பு இவை அனைத்தும் சேர்ந்து ரசிகர்களை திரையரங்கிற்கு இழுத்துச் சென்றுள்ளது.


Advertisement

Advertisement