• Apr 27 2025

சூர்யா பட டைட்டிலில் புதிய சீரியல்! அடுத்தடுத்து மூன்று சீரியல்களை களமிறக்கும் சேனல் எது தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகள் போட்டி போட்டு ரியாலிட்டி ஷோக்கள், சீரியல் என புதிது புதிதாக பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது சன் டிவியில் அடுத்தடுத்து மூன்று சீரியல்கள் புதிதாக ஒளிபரப்பாக உள்ளன. அது தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதேபோல விஜய் டிவியிலும் தமிழும் சரஸ்வதியும் சீரியல்  முடிவுக்கு வந்த நிலையில், அதற்கு பதிலாக பனிவிழும் மலர்வனம் என்ற புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.


இந்த நிலையில், தற்போது சன் டிவியில் வாரணம் ஆயிரம் என்ற பெயரில் புது சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளதோடு, அதில் நியாஸ் ஹீரோவாகவும் ஸ்வாதி கொண்டே ஹீரோயினாகவும் நடிக்க  கமிட்டாகி உள்ளார்கள்.


இந்தப் சீரியலின் தலைப்பு சூர்யா நடித்து ஹிட்டான படத்தின் பெயரில் இருப்பதால் அதே கதையாக இருக்குமோ என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியல் நடிகை  நிமிஷிகா மற்றும் கார்த்திக் வாசு நடிப்பில் மற்றும் ஒரு சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

அத்துடன் தோழி என்ற சீரியலும் புன்னகைப் பூவே என்ற சீரியலும் அடுத்தடுத்து ஒளிபரப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement