• Jul 07 2025

2வதாக சீதாவை கல்யாணம் பண்ணும் அருண்.! உச்சகட்ட கோபத்தில் முத்து... அதிரடியான ஆட்டம்!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மனோஜ் ஒரு வடைக்காக கல்யாண வீட்டில நின்று அடிபட்டுக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து விஜயா கல்யாண மண்டபத்தைப் பார்த்து இந்த மண்டபம் அவ்வளவு பெருசா இல்ல என்கிறார். அதைக் கேட்ட அண்ணாமலை நல்ல விஷயம் நடக்குது நீ பாட்டுக்கு எதையாவது கதைச்சுக் கொண்டிருக்காத என்று சொல்லுறார். 


அதனை அடுத்து அருணோட அம்மா மீனாவைப் பார்த்து இப்புடி ஒரு நாள் வராமலே போயிடுமா என்று நினைத்தேன். இப்ப நான் ஆசைப்பட்ட மாதிரியே சீதா மருமகளாக வரப்போறாள் இதுக்கெல்லாம் உனக்கு தான் நன்றி சொல்லணும் என்கிறார். அதுக்கு மீனா நான் என்னங்க பண்ணான் என்று சொல்லுறார். இதனை அடுத்து அருணோட வேலை பார்க்கிறவர் அந்த மண்டபத்தில இருக்கிறவங்களுக்கு இது அருணுக்கு நடக்கிற 2வது கல்யாணம் என்று சொல்லுறார்.

பின் அருணுக்கு 2வது கல்யாணம் என்ற செய்தி அங்கிருந்த எல்லாருக்கும் தெரியவருது. இதனை அடுத்து மீனா அங்கிருந்தவங்களுக்கு நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல இதுக்கு முன்னாடி சீதாவும் அருணும் register கல்யாணம் பண்ணிகிட்டாங்க அதை தான் இப்புடி சொல்லினம் என்கிறார். இதனை அடுத்து முத்து மீனாவைப் பார்த்து எனக்கு தோத்துப் போறதில ஒரு பிரச்சனையும் இல்ல சீதா நல்லா இருந்தால் காணும் என்கிறார்.


பின் அருண் 2வது கல்யாணம் செய்யுறார் என்ற விஷயம் முத்துவுக்கு தெரியவருது. அதைக் கேட்டவுடனே முத்து கோபப்படுறார். மேலும் கல்யாணம் நடக்க கூடாதுனு சொல்லிட்டு மண்டபத்துக்குள்ள போய் கத்திக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்த மீனாவோட அம்மா நீங்க சொல்லுறது எல்லாம் உண்மையா என்று கேட்கிறார். பின் அருணோட அம்மா அப்புடி எல்லாம் எதுவுமே நடக்கல என்கிறார். இதனை அடுத்து அருணும் ஆமா இது 2வது கல்யாணம் தான் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement