• May 15 2026

முத்து எடுத்த முடிவு; ரோகிணிக்கு பயத்தை காட்டிய மீனா..! இன்றைய எபிசோட்

shali / 5 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  முத்து ஏற்பாடு செய்த ஐயப்பன் சாமி  பூஜையில் கலந்து கொண்ட மீனா மனம்  மாறுகின்றார். முத்து அதற்கு பிறகு மலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்.  


அதற்குப் பிறகு மீனா வீட்டுக்கு செல்ல, அண்ணாமலை அவரை  உள்ளே அழைக்கின்றார். எனினும் விஜயா முதலில் பேசவிட்டு அதற்குப் பிறகு திடீரென மீனாவை விரட்டினால் மீண்டும் ரோகிணியின் சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்று உள்ளே அழைக்கின்றார். ஆனால் ரோகிணி அதிர்ச்சியில் காணப்படுகிறார்.

இன்னொரு பக்கம் ஸ்ருதியின் ரெஸ்டாரெண்டை வீழ்த்த வேண்டும் என்று நீத்து இருவரை பணம் கொடுத்து  தப்பாக ரிவ்யூ பண்ண அனுப்புகின்றார். 


ஆனால் உஷாரான ஸ்ருதி, அவர்கள் ஆரம்பத்தில் இருந்து பண்ணிய சேட்டைகளை வீடியோ எடுத்து இறுதியில் கையும் களவுமாக பிடிக்கிறார். பின்பு பொலிஸில் கொடுக்கவா என்று மிரட்டவும் அவர்கள் பயந்து ஓடி விடுகின்றனர்.

அதன் பின்பு நீத்துக்கு கால் பண்ணி  நடந்தவற்றைச் சொன்னதோடு,  எனக்கு என்னுடைய வேலையை பார்க்க தான் நேரம் இருக்குது . உன்னைப் பற்றி தெரிந்ததும் ரவி என்னுடன் வந்து விடுவான்  என்று சொல்லுகின்றார். 

இதைத்தொடர்ந்து மனோஜ் உடன் வேலை பார்க்கும் ஜீவா, புதிய ஐடியா ஒன்றை கொடுக்கின்றார்.   அதனை ரோகிணியும் ஏற்றுக் கொள்கிறார். இதுதான்  இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement