• Apr 29 2025

சிந்தாமணிய காமெடி பீசாக்கி ஆட்டத்தை முடிச்சுவிட்ட முத்து..!சந்தோசத்தின் உச்சியில் மீனா..!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, சிந்தாமணி வீட்ட இருந்த மீனான்ர பணத்த முத்து கண்டுபிடிக்கிறார். இதைப் பார்த்த ரவி அதுதான் பணம் கிடைச்சிருச்சு எல்லோ வாங்க இந்த இடத்த விட்டுப் போகலாம் என்று சொல்லுறார். இதனை அடுத்து முத்து கீழ வந்து சிந்தாமணிட வீட்ட வேலை செய்யுற ஆட்களிட்ட இங்க எதுவும் கிடைக்கல தவறான தகவல் கிடைச்சிருக்கு என்று சொல்லுறார். பின் முத்து எல்லாரையும் கூட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்புறார்.

அப்ப ஸ்ருதியோட தலை முடி கதவில மாட்டுப்பட்டு வெளியில போகேலாம நிக்கிறார். அதனை அடுத்து வெளியில வந்த முத்து எங்கடா பல குரலக் காணோம் என்று தேடுறார். அப்ப சிந்தாமணியோட கார் வாறதப் பாத்த முத்து ரவிய காரில ஏறு இங்க இருந்து கிளம்பலாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட ரவி ஸ்ருதி உள்ள இருக்கிறாள் அவள எப்புடி விட்டுட்டுப் போறது என்று சொல்லுறார். மேலும் போச்சு நல்லா மாட்டினோம் என்கிறார்.


அதைத் தொடர்ந்து ஸ்ருதி வீட்ட விட்டு வெளியில வரும் போது சிந்தாமணியிட்ட மாட்டுப்படுறார். அதைப் பார்த்த சிந்தாமணி ஸ்ருதியப் பாத்து யாரு கண்ணு நீ என்று கேக்கிறார். இதைத் தொடர்ந்து ஸ்ருதி சிந்தாமணி கிட்ட இருந்து ஒரு மாதிரி சமாளிச்சு தப்பித்து ஓடுறார். பின் ரவி ஸ்ருதியப் பாத்து இவளா நேரமா எங்க போனி என்று கேக்கிறார்.

இதனை அடுத்து முத்து மீனாவுக்கு போன் எடுத்து பணம் கிடைச்சிருச்சு என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனா ரொம்பவே சந்தோசப்படுறார். பின் சிந்தாமணி வீட்ட இருந்த பணத்த எடுத்துக் கொண்டு போனத அறிந்து ரொம்பவே கோபப்படுறார். அப்ப மீனா சிந்தாமணிக்கு போன் எடுத்து நக்கலா கதைச்சுக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement