• May 06 2025

பாலிவுட்டில் தடம் பதிக்க ரெடியாகும் மீனாட்சி சவுத்ரி..! ஹீரோ யார் தெரியுமா..?

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனியுடன் நடிகை மீனாட்சி சவுத்ரி 'கொலை' படத்தில் நடித்திருந்தார். இப்பொழுது அந்நடிகை ஒரு முக்கியமான திருப்புமுனையை அடைந்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துவந்த இவர், தற்போது பாலிவுட் சினிமாவில் நுழையவுள்ளதாக தகவல்கள் உறுதியாகியுள்ளன.

2023ம் ஆண்டு, விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த 'கொலை' படம், ஒரு மெசேஜும் சஸ்பென்ஸும் கலந்த கிரைம் திரில்லராக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்பின், தி கோட் , லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது நடிப்புக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தனித்த கவனத்தை காட்டத் தொடங்கினர்.


இதனிடையே, தெலுங்கில் வெங்கடேஷுடன் நடித்த ‘சங்கராந்திகி வஸ்துன்னம்’ படம், மிகப்பெரிய ஹிட்டாகி வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. ஒரு பெரிய நடிகருடன் தனது நடிப்பை அழுத்தமாக பதிவு செய்தது மீனாட்சியின் திரைப் பயணத்தில் முக்கியமான கட்டமாக அமைந்தது.

தற்போது, தெலுங்கில் 'அனகனக ஓக ராஜு' என்ற புதிய படத்தில் மீனாட்சி நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரி இயக்குகிறார். இப்படத்தில் முன்னணி நடிகர் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் படம் என்ற வகையில் உருவாகி வரும் இந்தப் படம், மீனாட்சிக்கு இன்னொரு பரவலான ரசிகர் வட்டத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement