தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாகவும் மக்கள் மனதில் ராஜா போன்றும் வாழ்ந்து வருபவர் தான் தளபதி விஜய். அவரைப் பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அத்தகைய நடிகர் குறித்து பரபரப்பான சம்பவம் தான் சமீபத்திலும் நடந்துள்ளது.
அது என்னவென்றால் விஜய் சமீபத்தில் காரில் ஏறுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு ரசிகர் அவரின் காலை மிதித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில், அருகில் இருந்த ஒருவர் நகைச்சுவையாக,“பாட்ஷா நீ தான் மிதிச்சிட்ட...உன் மேல தான் கேஸ் போடனும்..!” என்று கூறியிருந்தார். அந்த வார்த்தையை கேட்டவுடன் விஜய் அவரைப் பார்த்து மெல்ல சிரித்துக் கொண்டே காரில் ஏறினார். அந்த சிரிப்பு தான் இப்போது இணையம் முழுவதும் சுற்றி வருகின்றது.
விஜயின் வெற்றிக்கான காரணங்களில் முக்கியமானது, அவர் சாதாரணமாக நடந்து கொள்வது. எந்தவொரு சூழ்நிலையிலும் கூட அவருடைய முகபாவனையில் ஆவேசம் காணப்படாது. அத்துடன் எந்த சூழ்நிலையிலும் ரசிகர்களுடன் அன்பாகவே நடந்து கொள்வார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
Listen News!