• Aug 30 2025

குமார் எடுத்த முடிவால் குழம்பிய சக்திவேல்..! செந்திலை நினைத்து வேதனையில் தவிக்கும் மீனா...

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, செந்தில் மீனாவப் பார்த்து உனக்கு இன்னும் நான் gift வாங்கிக் கொண்டு வந்த கோபம் குறையலயா என்று கேட்கிறார். அதுக்கு மீனா உங்களிட்ட இப்ப நான் ஏதாவது கதைச்சு ஏன் வீணா டென்ஷன் ஆகணும் என்கிறார். அதைத் தொடர்ந்து மீனா செந்திலைப் பார்த்து கூட வேலை செய்யுறவங்களிட்ட பணம் வாங்கினது என்று சொன்னீங்க அதைக் கொண்டு போய் கொடுங்க என்று பணத்தை நீட்டுறார்.


அதுக்கு செந்தில் அதை எல்லாம் நான் பார்த்துகிறேன் என்கிறார். இதனைத் தொடர்ந்து முத்துவேல் வீட்டிற்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக பொண்ணு வீட்டுக்காரர் வந்து நிக்கிறார்கள். வீட்டுக்கு வந்த பொண்ணு வீட்டுக்காரர் குமார் ஒரு பொம்பிளையை கூட்டிக் கொண்டு போய் கல்யாணம் பண்ணினாரா என்று கேட்கிறார்கள். அதுக்கு சக்திவேல் குமார் அப்புடி எல்லாம் இல்ல அவன் நல்ல பையன் என்கிறார். 

பின் குமார் வீட்ட வந்த பிறகு சக்திவேல் இவங்க தான் பொம்பிள வீட்டுக்காரங்க என்று சொல்லுறார். இதனைத் தொடர்ந்து பொம்பிள வீட்டுக்காரங்க குமாரோட கேஸ் சீக்கிரம் முடிஞ்சிடுமா என்று கேட்கிறார்கள். அதுக்கு சக்திவேல் அதெல்லாம் வேளைக்கு முடிஞ்சிடும் என்கிறார். பின் குமார் எனக்கு கல்யாணம் பண்ணுறதுக்கு சுத்தமா விருப்பம் இல்ல என்கிறார்.


அதைக் கேட்டு வீட்டில இருக்கிற எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். இதனைத் தொடர்ந்து சுகன்யா வீட்ட வந்து அரசி கிட்ட நடந்ததெல்லாத்தையும் சொல்லுறார். அதைப் பார்த்த மீனா அரசி கிட்ட தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பேசவேணாம் என்கிறார். பின் ராஜி மீனாவப் பார்த்து கதிர் ட்ராவெல்ஸ் ஆரம்பிக்கிறதுக்கு தேவையான பணத்த கொடுக்க டான்ஸ் போட்டியில கலந்து கொள்ளப் போறேன் என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement