• Apr 27 2025

என்னமா கேட்ச் பிடிக்குறாங்கய்யா பசங்க? வெளியாகிய மஞ்சுமல்போய்ஸ் ஸூட்டிங் வீடியோ!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா திரைப்படங்கள் ஒழுங்கான கதைகளத்தை தேர்தெடுக்காமல் கமெர்சியல் விடயங்களை மட்டும் வைத்து திரைப்படங்களை எடுப்பதினால் தமிழை தாண்டி மற்றைய மொழிகளில் வசூல் செய்ய முடியாமல் உள்ளது. இதன் காரணமாகவே வேறு மொழிகளில் அருமையாக புதிய கதைகளை மையமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள் தமிழில் ஹிட் கொடுக்கின்றன. அவ்வாறு சமீபத்தில் 200 கோடியை தாண்டி வசூல் செய்த திரைப்படமே மஞ்சுமல் பாய்ஸ் ஆகும்.


சிதம்பரம் இயக்கத்தில் கமலின் குணா திரைப்படத்தில் காட்டப்படும் குகையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். மலையாளத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை செய்த இந்த படம் தற்போது OTT யிலும் வெளியாக தயாராக உள்ளது. இந்த நிலையிலேயே இதனை விளம்பர படுத்தும் விதமாக ஸூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில விடீயோக்களை வெளியிட்டுள்ளனர்.


அது சிறிய படகு ஒன்றில் நின்றுகொண்டு அவர்கள் உணவை எறிந்து விளையாடும் காட்சி ஆகும். ஆக்சன் என இயக்குனர் சொன்னதும் நிலத்தில் நின்று எறிந்த உணவை படகில் நின்ற நபர் பிடித்ததும் கத்தி ஆர்ப்பாட்டம் போடுகின்றனர். குறித்த காணொளிகளே வெளியாகி உள்ளது.

Advertisement

Advertisement