• Apr 28 2025

ஓவரா சீன் போடாதீங்க.. கடுப்பாகுது.. மானஸ்வி லேட்டஸ்ட் வீடியோவுக்கு குவியும் கண்டனங்கள்..

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

குழந்தை நட்சத்திரமான மானஸ்வி தனது தாயாருடன் சென்று அழகு நிலையத்தில் சிகை அலங்காரம் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் அந்த வீடியோவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

காமெடி நடிகர் கொட்டாட்சியின் மகள் மானஸ்வி என்பதும் அவர் நயன்தாரா, த்ரிஷா உட்பட பல முன்னணி நடிகைகளுடன் நடித்துள்ளார் என்பதும் தற்போது கூட அவர் பிசியாக இருக்கிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் மானஸ்வி தனது பிறந்த நாளை கொண்டாடிய போது தனது மகளுக்காக நடிகர் கொட்டாச்சி கார் வாங்கி கொடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியானது என்பதும் அந்த காரின் மதிப்பு ரூ.13 லட்சம் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மானஸ்வி தனது தாய் மற்றும் தந்தையுடன் சென்று அழகு நிலையத்தில் சிகை அலங்காரம் செய்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அம்மா, மகள் ஆகிய இருவரும் சிகை அலங்காரத்துடன் போஸ் கொடுத்த காட்சிகள் அந்த வீடியோவில் இருக்கும் நிலையில் இந்த வீடியோவுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வந்தாலும், பலர் லைக் செய்தபோதிலும், ஒரு சிலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்

’நீங்கள் நன்றாக நடியுங்கள், முடியை அலங்காரம் செய்து கொள்ளுங்கள், நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை, அது உங்கள் விருப்பம், ஆனால் இந்த மாதிரி வீடியோ போட்டு எங்களை கடுப்பேத்தாதீர்கள், ஓவர் சீன் போட வேண்டாம், உனக்கு ஏன் கடுப்பு என்று கேட்கலாம், நீங்கள் வீடியோவை உங்களுக்குள் பார்த்துக் கொண்டால் எங்களுக்கு எந்த கடுப்பும் இல்லை, ஆனால் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வதால் தான் கடுப்பு என்று சொல்கிறோம்’ என்று ஒரு நெட்டிசன் பதிவு செய்துள்ளார் .

Advertisement

Advertisement