• Aug 08 2025

இந்தியில் ரீமேக்காகும் மகாராஜா திரைப்படம்..! ஹீரோ யாரு தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் விஜய் சேதுபதி. இவர் மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்ற படங்களில் வில்லனாக நடித்து கலக்கியிருந்தார்.

மகாராஜா திரைப்படத்தில் மம்தா மோகனதாஸ், அனுராக் காஷ்யப், அபிராமி, முனீஸ் காந்த், பாரதிராஜா, நட்டி நட்ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த படமாக விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் காணப்படுகிறது. 


இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 105 கோடிக்கு அதிக வசூலை ஈட்டி உள்ளதாக படக் குழுவினர் அதிகார்வ பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பும்  பெரிதளவில் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் இந்தியில்  ரீமேக்காக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளது.

இதில் விஜய் சேதுபதியின் கேரக்டரில் நடிப்பதற்கு பாலிவுட் ஸ்டார் அமீர்கான் ஒப்பந்தமாக இருப்பதாக கூறப்படுகின்றது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement