• Jul 09 2025

லக்கி பாஸ்கர் 2' வெளியாவது உறுதியா.? இயக்குநர் வெங்கிஅட்லூரி கொடுத்த புதிய அப்டேட்..!

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. துல்கர் சல்மான் நடித்த இந்த படம், சஸ்பென்ஸ் கலந்த பாணியில் வித்தியாசமான கதைக்கருவை கொண்டு உருவானது.  தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த உற்சாகமான தகவல்களை இயக்குநர் வெங்கி அட்லூரி உறுதிப்படுத்தியுள்ளார்.


இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில், “லக்கி பாஸ்கர் 2 கண்டிப்பாக உருவாகும். நாங்கள் இருவரும் தற்போது அவரவர் திட்டங்களில் பிஸியாக இருக்கிறோம். ஆனால் இந்த படம் நிச்சயமாக வரும். சிறிது நேரம் எடுக்கும், ஆனால் இது ஒரு உறுதியான செய்தி." எனத் தெரிவித்திருந்தார்.


இத்தகவல், ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் படம் குறித்து மேலதிக தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதாக கமெண்ட்ஸினைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement