• Apr 16 2026

எல்லா வயதிலும் காதல் வாழ்கிறது... – வைரமுத்தின் மனதை தொட்ட பதிவு படுவைரல்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு வயதினரும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, சமூக வலைத்தளங்களில் காதலின் மகத்துவத்தைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து தனது எக்ஸ் (X) தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது.


காதலர் தினத்தை முன்னிட்டு அவர் பகிர்ந்துள்ள கருத்தில்,“காதல் எனும் உயிர்ப்பண்பு ஆண் பெண் மாமிசத்தோடு மட்டும் சம்பந்தப்பட்டதில்லை. எல்லா நிலைகளிலும், எல்லா வயதினிலும் அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது…” என்று அவர் பதிவு செய்துள்ளார்.

இந்தச் சொற்கள் காதலை ஒரு உடலியல் உணர்வாக அல்லாது, மனித வாழ்வின் அடிப்படை உயிர்ப்பண்பாக உயர்த்திப் பேசுகின்றன. பெற்றோர்-பிள்ளை பாசம், நண்பர்களுக்கிடையிலான நம்பிக்கை, மனிதன் இயற்கையுடன் கொண்ட உறவு – இவை அனைத்திலும் காதல் வாழ்கிறது என்பதை கவிஞர் சுருக்கமாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement