• Jul 20 2025

சிறகடிக்க ஆசை சீரியல் நாயகியின் லேட்டஸ் போட்டோஸ்.. எவ்வளவு க்யூட்டா இருக்காங்க பாருங்க..

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது தமிழ்நாட்டு டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலைக்கு வந்து சாதனை படைத்துள்ளது.

இதில் தற்போது மீனாவின் நகைகளை கவரிங் நகையாக மாற்றிய மனோஜ், விஜயா நாடகம் ஆடி வந்த நிலையில், முத்து மனோஜ்க்கு போட்ட போடில் உண்மையை சொல்ல வந்தார். ஆனாலும் விஜயா அதை தடுத்து யாரிடம் கடன் வாங்கினாய் என பிளேட்டை மாற்றி விடுகிறார்.

ஆனால் முத்து, மனோஜ் தான் எடுத்தான் என ஆணித்தரமாக நம்புகின்றார். இதனால் இந்த விஷயத்தை எப்படி கண்டுபிடிக்க போகின்றார் என்பதை மையமாகக் கொண்டு தற்போதைய கதைக்களம் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.


இந்த சீரியலில் முத்துவாக வெற்றி வசந்தும், மீனாவாக கோமதிப் பிரியாவும் நடித்து வருகின்றார்கள். இந்த சீரியல் தமிழில் மட்டுமின்றி 5 மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கோமதிப் பிரியா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்,


Advertisement

Advertisement