நடன உலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி “நடனப்புயல்” என்ற பட்டத்தை பெற்றவர் பிரபுதேவா. இயக்குநர், நடிகர், நடன இயக்குநர் என பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த அவர், பல தலைமுறைகளுக்கும் ஒரு அடையாளமாக இருந்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘மூன்வாக்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பிரபுதேவாவின் குடும்பத்தில் இருந்து மற்றொரு திறமையான முகம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது மகன் ரிஷி தேவா, தனது நடன திறமையால் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். ரிஷி தேவா, தனது முதல் முயற்சியாக ‘முதன் முதலாய்’ என்ற இசை ஆல்பத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த பாடலில் அவருக்கு ஜோடியாக கியாரா வாசுதேவன் நடித்துள்ளார்.
இந்த இசை ஆல்பத்தை இயக்குநர் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும், இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் G. V. பிரகாஷ் குமார் பாடியிருப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. அவருடைய குரலும், இசையும் பாடலுக்கு ஒரு தனி கவர்ச்சியை வழங்கியுள்ளன.
சமீபத்தில் வெளியான இந்த பாடல் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ரிஷி தேவாவின் நடன அசைவுகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. அவரது ஸ்டைல், அவரது தந்தை பிரபுதேவாவின் தாக்கத்தை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!