கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதை வென்ற பாலா தான் உழைக்கும் பணத்தை ஏழைகளுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார். சமூக சேவையில் ஆர்வம் காட்டி வரும் இவர் பெயரில் இந்தியாவில் பல அம்புலன்ஸ்கள் ஓடுகின்றன இவ்வாறு பல சேவைகளை ஆற்றி வரும் இவர் சினிமாவில் எப்போது நடிப்பார் என பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது பாலாவின் புதிய படம் குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பல சின்ன சின்ன விடயங்களை தனது சொந்த பணத்தில் செய்து வருவதால் இந்தியா முழுவதும் லாரன்ஸிற்கு அடுத்து இவருக்கு ரசிகர் கூட்டம் உள்ளது.
மேலும் இவர் இயக்குநர் ஷெரீஃப் இயக்கும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி பாலா ரசிகர்களை பாரிய எதிர்பார்ப்பிற்கு ஆளாக்கியுள்ளதுடன் படம் பெரிதும் வெற்றி அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!