• Sep 21 2025

மிஷ்கின், விஜய் சேதுபதிக்கு நன்றியுடன்....!கிஸ் படக்குழுவின் உணர்வுப்பூர்வமான பகிர்வு...!

Roshika / 3 days ago

Advertisement

Listen News!

ஒரு படத்துக்கு சரியான தலைப்பு ரொம்ப முக்கியமான விஷயம். இந்த படத்துக்கு "கிஸ்" என்ற டைட்டில் கிடைத்ததற்கும், அதற்குள் பொருள் இருப்பதற்கும் பின்வரும் மனிதர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.


இயக்குநர் மிஷ்கின் சாரிடமிருந்துதான் இந்த டைட்டில் வந்தது. அவரிடம் கேட்டதும், எந்தவிதமான தயக்கமும் இல்லாமலே உடனே ஒப்புக்கொண்டார். இந்த டைட்டில் எல்லோருக்கும் தங்களுடைய ஒரு தனி பொருள் கொடுக்கிறது. அந்த வகையில், ஒவ்வொருவரும் இதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதே முக்கியம். அந்த நம்பிக்கையோடு மிஷ்கின் சார் இந்த டைட்டிலை வழங்கியது நிஜமாகவே மிகப் பெரிய விஷயமா படக்குழு கருதுகிறது. அவருக்கு இதயம் கனிந்த நன்றி!

அடுத்து, விஜய் சேதுபதி அண்ணா. படத்தின் வாய்ஸ் ஓவருக்காக அவரை லாஸ்ட் மினிட்டில்தான் அணுகினோம். யார் பேசினா கதைக்கு உயிர் வரும் அப்படின்னு யோசிக்கும்போது, எங்களுக்கு உடனே சேதுதான் தோணிச்சார்.

அவர் பேசும் பாணியும், அவரது இயல்பு மனோபாவமும் கதையோட மெய்சிலிர்க்கும் உணர்வோட பொருந்தும். நாங்கள் அவரை சந்தித்து சொல்லி, பத்து நிமிஷத்துக்குள்ளே டப்பிங்கை முடிச்சு, மிக பிஸியான ஷெட்யூலில்கூட நேரம் ஒதுக்கி அந்த வேலையை செய்து முடித்தார்  என்று கூறியிருந்தார்.

Advertisement

Advertisement