• Jun 20 2025

New Lookல் என்ட்ரி கொடுத்த கீர்த்தி.! வெளியானது ‘உப்பு கப்புரம்பு’ படத்தின் டிரெய்லர்..

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் எனப் பல மொழிகளில் திறமையுடன் நடித்து, தேசிய விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது இவர் நடித்துள்ள புதிய திரைப்படமான ‘உப்பு கப்புரம்பு’ நேரடியாக OTT தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


‘உப்பு கப்புரம்பு’ என்பது 90களில் நடைபெறும் உணர்வுபூர்வமான சினிமா. இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் தெலுங்கு திரைப்பட இயக்குநர் சசி, மற்றும் கதையை எழுதியுள்ளார் வசந்த் மரியங்கண்டி. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சுகாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இது 90களின் வாழ்க்கைமுறை, குடும்பம், சாதாரண மனிதர்களின் கனவுகள் மற்றும் சமூக அவலங்கள் போன்ற பல உண்மைகளை உணர்த்தும் படமாக இருக்கப்போகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.


கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் ஊருக்குள் வாழும் சாதாரண பெண்ணாக தோன்றுகிறார். 90களில் ஒரு பெண் எதிர்கொள்ளும் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில், அவரது நடிப்புத் திறமை முழுமையாக வெளிப்படும் எனக் கூறப்படுகின்றது. 

தியேட்டருக்கு பதிலாக, படம் OTT வழியாக வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. குறிப்பாக, ஜூலை 4, 2025 அன்று Amazon Prime Videoவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் எனவும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், ‘உப்பு கப்புரம்பு’ படத்தின் டிரெய்லர் தற்பொழுது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் தற்போது YouTube மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.


Advertisement

Advertisement