• Jul 13 2025

அல்லு அர்ஜுனை கைது பண்ணீங்களே... விராட் கோலியை ஏன் கைது பண்ணல? கூல் சுரேஷின் ஆதங்கம்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல திரைப்பட நடிகர் மற்றும் சமூக நலம் சார்ந்த கருத்துகளுக்காக பிரச்சாரம் செய்து வருபவர் கூல் சுரேஷ். இவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து,விராட் கோலி, அல்லு அர்ஜுன் மற்றும் காவல்துறையின் இரட்டை நிலைப்பாடுகள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.


கூல் சுரேஷ் அதன்போது, “அந்த RCB அணியின் IPL வெற்றி விழா கொண்டாடும் போது 11 பேர் கூட்டநெரிசலில் உயிரிழந்தாங்க. அந்த விழாவில் தள்ளு முள்ளு நடந்தது. ஆனா யாரையும் கைது செய்யல. இதே விஷயம் சினிமாவில நடந்திருந்தா என்ன ஆயிருக்கும்?” என்றார்.

தொடர்ந்து , “சினிமா தியேட்டரில ஒரு விபத்து நடந்தா உடனே ஹீரோவை பொலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக் கொண்டு போறீங்க. ஆனா கிரிக்கெட் விழாவில 11 பேர் இறந்ததுக்கு யாரையும் கைது பண்ணல. இது என்ன நிஜாயம்?”


மேலும், “புஷ்பா 2 படம் தியேட்டரில வெளியான போது கூட்ட நெரிசலில் ஒரு பெண் இறந்தப்போ... அல்லு அர்ஜுனை கைது பண்ணாங்க. அப்ப ஏன் விராட் கோலியை கைது பண்ணல.” என்றும் கேட்டிருந்தார்.

அத்துடன் ஏன் இப்படி சினிமாவையும் கிரிக்கெட்டையும் பிரித்துப் பார்க்கிறீங்க எனவும் கேள்வியினை எழுப்பினார். இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதனை மிகவும் நேர்மையான கேள்வி என பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement