• Aug 17 2025

அரசியலில் புதிய தொடக்கம்..! மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்ற கமல்ஹாசன்.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

இந்திய அரசியல் வரலாற்றில் புதிய திருப்பமாகவும், தமிழ் மக்கள் அரசியலுக்கு ஒரு முக்கியமான அடையாளமாகவும் இன்று (ஜூலை 25, 2025) முக்கிய நிகழ்வு ஒன்று நடைபெற்றது. பிரபல நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் (ம.நீ.ம) கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இந்திய நாடாளுமன்றத்தின் உயர்சபையான மாநிலங்களவையில் உறுப்பினராக இன்று பதவியேற்றார்.


அவரின் பதவியேற்பு நிகழ்வு பாராளுமன்ற வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனநாயகத்தின் பெருமை, கலைஞரின் பண்பாடும் அரசியலுக்கான அவரது அர்ப்பணிப்பு என்பன வெளிப்பட்டன.

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக கலைஞராக திகழ்ந்தவர். நுட்பமான நடிப்பு, சமூக உணர்வுகள், அறிவியல் பார்வை, மனிதநேயக் கோணங்கள் என பல பரிமாணங்களை தமிழ்த் திரையுலகில் பதித்தவர்.


அத்தகைய கலைஞரின் பதவியேற்பு நிகழ்வு இன்று காலை நாடாளுமன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை சபாநாயகர் முன்னிலையில், கமல்ஹாசன் எம்.பி. பதவிப் பிரமாணத்தை எடுத்தார். தனது பெயரை தமிழில் எழுதி பதவிப் பிரமாணத்துடன் கையெழுத்திட்டுள்ளார். 


Advertisement

Advertisement