• Apr 17 2026

விடாமுயற்றசி மாதிரியே கோட் படமும் ட்ரோப்பா? கோட் படத்தில் இருந்து அவுட் ஆகும் புதிய விக்கட் !

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தளபதி என அழைக்கப்படும் முன்னணி நடிகர் விஜய் ஆவார். இவர் சமீபத்தில் சினிமாவை விட்டு விலகப்போவதாக கூறியிருந்தார். இன்னும் இரண்டு படங்களோடு விலக போவதாகவும் இனி முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் கூறியது மட்டும் இன்றி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியையும் ஆரம்பித்துள்ளார்.


பொதுவாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றிற்குமே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஒன்று காணப்படும். அவ்வாறே சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் , பிரபு தேவா , பிரசாந்த் ஆகியோருடன் இணைந்து நடிக்கும் கோட் படம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.


குறித்த திரைப்படத்தில் கேப்டன் மில்லர், வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சித்தார்த் நுனி கோட் படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்ததாகவும். ஆனால் தற்போது கோட் படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சக்தி சரவணன் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார் என்றும் வலைப்பேச்சு அந்தணன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement