• Aug 08 2025

மல்யுத்த போட்டியா இது? Dhee-யிடம் மன்னிப்பு கேட்கிறேன்.! சின்மயியின் நெகிழ்ச்சி உரை!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி ஸ்ரீபாதா, தமிழ் இசைத்துறையில் தனக்கென ஒரு அழுத்தமான இடத்தை உருவாக்கியவர். தனது மென்மையான குரலால் அதிகளவான பாடல்களைப் பாடி தனது திறமையை நிரூபித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட சின்மயி, சமூகவலைத்தளங்களில் பரவி வரும் Dhee vs சின்மயி என்ற வாதத்திற்கு நேரடியாகப் பதிலளித்துள்ளார். தனது பதில்களில் குரலின் வளர்ச்சி, ஒப்பீடு, திறமைகள் ஆகியவை குறித்து உணர்ச்சி மிகுந்த கருத்துகளைப் பதிவு செய்திருக்கின்றார்.


தனது உரையில் சின்மயி கூறியதாவது, "Dhee வெர்சன், Chinmayi வெர்சன் என்றெல்லாம் கூறுவது தேவையில்லை. இது சம்மந்தமே இல்லாத ஒன்று. மல்யுத்த போட்டியில் எங்களைப் போட்டியிடச் சொல்வது மாதிரி இது உள்ளது!" என்றார்.

பாடகியாக இருக்கும் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக, அவர் மிக நேர்மையாகவும், விவேகமாகவும் கூறினார்,“கலைஞர்களாக நாங்கள் ஒருவரை ஒருவர் போட்டியாளராக பார்க்கவில்லை. ஒருவரின் திறமையைப் பார்த்து வியக்கத்தான் செய்கிறோம்.” எனவும் தெரிவித்திருந்தார்.


தற்போதைய இளைய பாடகி Dhee பற்றிய கருத்துக்களை சின்மயி பெரிதும் பாராட்டியிருந்தார். அதன்போது “Dhee இப்போது ஒரு சின்ன வயது பெண். அவருடைய குரலை என் குரலோடு ஒப்பிடுவது தேவையில்லாதது. இன்னும் 15 வருடங்களில், Dhee 100 சின்மயிக்களையும், 100 ஸ்ரேயாகோசல்களையும் தாண்டி செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன!” என்றார். 


Advertisement

Advertisement