• Aug 08 2025

உறுப்பினர் பட்டியலில் ரெகார்ட் போட திட்டமிடும் விஜய்.! வெளியான சுவாரஸ்யமான தகவல்கள்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றி கழகம் (தவெக) தனது அமைப்புசார் வலிமையை பலப்படுத்தும் நோக்கில், மிகப் பெரிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்குவதற்கு முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மொத்தமாக 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைப்பதையே பிரதான இலக்காக வைத்துள்ளனர்.


இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, நாளை நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியினர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இந்த கூட்டம் தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் மாநிலம் முழுவதிலும் உள்ள மாவட்ட செயலாளர்கள், தகவல் தொழில்நுட்பக் குழுவின் நிர்வாகிகள், மற்றும் சமூக ஊடக பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.


கூட்டத்தில் பங்கேற்கும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், தங்களது மடிக்கணனியுடன் (laptop) வர வேண்டும் என கட்சி தலைமையிடம் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.  


Advertisement

Advertisement