• Apr 15 2026

கட்சி வேற, சினிமா வேற… சண்முகபாண்டியன் வெளியிட்ட சுவாரஸ்யமான தகவல்.! படுவைரல்

shali / 3 months ago

Advertisement

Listen News!

நேற்றைய தினம் வெளியான 'கொம்புசீவி' திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்த இந்த படம், வெளியீட்டுக்குப் பிறகு பல திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக் கொண்டுள்ளது.


திரைப்பட வெளியீட்டின் பின்னர் சண்முக பாண்டியன், சரத்குமார் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். முன்னணி நடிகர் சரத்குமார் படத்தில் இணைந்தது குறித்து அவர் கூறிய கருத்துகள், ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.


சண்முக பாண்டியன் அதன்போது, "சரத்குமார் சார் வேற கட்சியா இருந்தாலும் அப்பாவோட பழைய நண்பரா வந்து இந்தப் படத்தில நடிச்சுக் கொடுத்தார். அவர் கூட வேலை செய்யும் போது, ஒரு மூத்த நடிகர் கூட வேலை செய்தது மாதிரி இல்லாம ரொம்ப எளிமையோடு என் கூட வேலை செய்தார்." என்று தெரிவித்தார்.

அவர் மேலும், "கட்சி வேற, சினிமா வேற… அம்மாவும் அண்ணனும் கட்சியை பார்த்துக்கிறார்கள்… நான் சினிமா." என்று கூறியுள்ளார். சண்முகபாண்டியனின் இந்தக் கருத்து தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement