உலகம் முழுவதும் எதிர்பார்ப்புடன் வெளியிடப்பட்ட ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான Avatar Fire and Ash (அவதார் 3) படம், தனது வெளியீட்டின் முதல் நாளே பலரிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மூன்று பாகங்களாக வெளிவருகின்ற அவதார் தொடர், முன்னைய பாகங்களின் வெற்றியின் பின்னால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

Avatar 3, “Fire and Ash”, உலகம் முழுவதும் நேற்றைய தினம் 2025 டிசம்பர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் திரை உலக வட்டாரங்களில் இதனைப் பாராட்டியுள்ளனர்.
இந்த மூன்றாவது பாகம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் 20 கோடி வசூல் செய்துள்ளதாக Sacnilk இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வசூல், இரண்டாவது பாகத்தின் முதல் நாள் வசூலை ஒப்பிடும் போது, அதே அளவு பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வசூல் தகவல், இத்திரைப்படத்தின் பிரபல தன்மையை பிரதிபலிக்கிறது.
Listen News!