• Aug 08 2025

திரையரங்குகளை விட்டு வீடு தேடி வருகிறார் இந்தியன் தாத்தா ! கெட் ரெடி...

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழின் பிரமாண்ட இயக்குனர் சங்கரின் எவர் கிறீன் படமான "இந்தியன்" திரைப்படத்தின் தொடர்ச்சியாய்  28 ஆண்டுகளின் பின் பெரும் பொருட் செலவில் உருவான "இந்தியன் - 2" திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 12 ஆம் திகதி உலகளவில் வெளியானது.

Indian 2 (2024) Movie (Jul 2024 ...

பிரமாண்ட இயக்குனர் ,உலக நாயகன் கமல்ஹாசன் ,பெரும் நட்சத்திர கூட்டணி என அத்தனையும் இணைந்த போதிலும் பல எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதோடு ரசிகர்களின் எதிர்பார்ப்பை உடைத்தது "இந்தியன் - 2".படத்தின் திரையிடல் நேரம் அதிகம் என்ற விமர்சனத்திற்கு செவி சாய்த்த படக்குழு படத்தின் நீளத்தை சற்றுகுறைத்து திரையிட்ட போதும் அதற்கான மாற்றம் ஏதும் இருக்கவில்லை.


இன்னும் மூன்றாவது வாரத்தை திரையரங்குளில் கடக்காத "இந்தியன் 2" திரைப்படம் வருகிற வாரமளவில் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன."இந்தியன் 2" திரைப்படமானது முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸ் இற்கு விற்கப்பட்டுள்ளது.இந்தியன் 2 இன் தமிழ் ,தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னட ரைட்ஸ் அனைத்தும் நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement