தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 9, தற்போது சண்டை மற்றும் மோதல்களுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. சீசன் ஆரம்பித்த நாளிலிருந்து பல்வேறு திருப்பங்களையும், எதிர்பாராத சம்பவங்களையும் சந்தித்து வரும் இந்த சீசன், தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி நகரும் நிலையில் ரசிகர்களின் கவனம் உச்சத்தில் உள்ளது.
சமீபத்தில் Ticket To Finale டாஸ்க்கின் ஒரு பகுதியாக நடைபெற்ற கார் டாஸ்க், இந்த சீசனின் மிகப்பெரிய சர்ச்சைகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்களிடையே ஏற்பட்ட உடல் ரீதியான மோதல், வார்த்தைத் தாக்குதல் மற்றும் நாகரிகம் மீறும் செயல்கள் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின.
குறிப்பாக, விஜே பார்வதி டாஸ்க்கின் போது நடந்துகொண்ட விதம் குறித்து ரசிகர்களிடையே பெரிய விவாதம் வெடித்தது.

இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, தற்போது பிக்பாஸ் சீசன் 9-ன் புதிய ப்ரோமோ வெளியாகி, இணையத்தை கலக்கி வருகிறது. அந்த ப்ரோமோவில், நிகழ்ச்சியின் நடுவர் விஜய் சேதுபதி, மிகவும் கடுமையான தொனியில் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
விஜய் சேதுபதி அதில், “சமீபத்தில் கார் டாஸ்க்கில் பார்வதி நடந்து கொண்ட விதத்தைப் பார்த்து விட்டு, ‘நாம என்ன வேணும் என்றாலும் பண்ணலாம்… நம்ம கிட்ட தான் வாய் இருக்கே, எதுவா இருந்தாலும் பேசி சமாளிச்சிடலாம்… நியாயப்படுத்திக்கலாம்…’ என்ற எண்ணம் இருக்கு பாருங்க… இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நான் பொறுத்துக்க மாட்டேன்.” என்று கூறியுள்ளார்.
இந்த வார்த்தைகள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ப்ரோமோ வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாகி விட்டது.
Listen News!