• Aug 08 2025

லண்டனில் செய்தேன்.. இப்போது என் தமிழருக்காக! வைரலாகும் இளையராஜாவின் சிம்பொனி அறிவிப்பு!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் இசையின் சக்கரவர்த்தியாகவும் உலகம் முழுவதும் இசைப் பிரியர்களை மயக்கும் பேராண்மையாகவும் இளையராஜா விளங்குகின்றார். அவரது இசைக் கலை, மனித உணர்வு என்பன ஒரு இசையமைப்பாளராக இல்லாது , இசைக்குள் இறங்கி வாழும் மனிதராகவே மாற்றியது.


அவருடைய வாழ்க்கையின் முக்கியமான நிகழ்ச்சியாக "London Symphony Orchestra"-வை பயன்படுத்தி அவர் கடந்த காலத்தில் இசையமைத்த “சிம்பொனி”, தமிழ்நாட்டில் மீண்டும் ஒருமுறை இசைக்கப்பட உள்ளதாக தற்பொழுது இளையராஜா அறிவித்துள்ளார். அதுவும் அதே இசைக் குழுவினரோடு இந்த நிகழ்வு ஆகஸ்ட் 2ம் திகதி நடைபெறவுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா சமீபத்தில் செய்தியாளர்களிடம், “லண்டனில் நான் இசைத்த அந்த சிம்பொனி என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பமாக இருந்தது. அந்த இசை என் மக்களுக்கு நேரில் கேட்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, தமிழ்நாட்டில் மீண்டும் ஒருமுறை அதனை இசைக்கின்றேன்." எனத் தெரிவித்திருந்தார்.


லண்டனில் நடந்த அந்த நிகழ்வை நேரில் கண்டவர்கள் சிலர், "இது ஒரு இசைக்கான யாத்திரை போல இருந்தது"எனக் கூறியிருந்தனர். அந்தவகையில் தற்பொழுது வெளியான தகவல் இசைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement