• Apr 17 2026

ஆதிரையின் பாய் ஃப்ரெண்ட் கூட பேசினேன்: என்னோட அம்மா இதான் சொன்னாங்க.. FJ பகிர்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்  பிரபலமான ரியாலிட்டி ஷோ  தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.  இதில் யார் டைட்டில் வின் பண்ணுவார் என்பது தற்போது வரையில் கேள்விக்குறியாகவே காணப்படுகிறது. 

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறிய எஃப்ஜே தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. 

அதன்படி  பிக் பாஸ் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக உள்ளே சென்றவர் எஃப்ஜே.  ராப் பாடல்கள் மூலம் பிரபலமானவர் இவருக்கு, ஆரம்பத்தில் அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் நாளடைவில் இவர் சக போட்டியாளர்களுடன் நடந்து கொண்ட  விதம்,  சண்டை, சச்சரவுகள் ரசிகர்களை வெறுப்படையச் செய்தது.


மேலும் ஆதிரை, வியானாவுடன் காட்டிய நெருக்கம்  மேலும்  சலிப்படையச் செய்தது.  ஒரு கட்டத்தில் எலிமினேட் ஆகி வெளியே சென்ற ஆதிரை, மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் வந்தார்.  இதனால் ஆட்டம் சற்று சூடு பிடித்தது. அதன் பின்பு இருவரும் ஒரே நேரத்தில் எலிமினேட் ஆகி மீண்டும் வெளியேறி சென்றனர். 

இவ்வாறான நிலையில் தற்போது எஃப்ஜே கூறுகையில் , நான் வெளியே சென்று கேரவனில் இருக்கும்போது   பக்கத்துல ஆதிரையின் சவுண்டு கேட்டது. நான் அவருடைய சவுண்டை கேட்டு வாட் அப்படி என்று கத்தி விட்டேன். அதற்கு பிறகு தான் சொன்னார்கள் ஆதிரையும் வெளியே வந்து விட்டார் என்று..

அதற்குப் பிறகு நான் ஆதிரையிடம் சென்று பேசிக் கொண்டிருந்தபோது, ஆதிரையில் பாய் பிரண்ட் வந்தார்.  நாங்க மூவரும் ரொம்ப ஜாலியா பேசிக்கொண்டு தான் வந்தோம். 

அந்த நேரத்தில் என்னுடைய அப்பா, அம்மா, அக்கா ஆகியோரும் வந்தார்கள். இதன்போது என்னுடைய அப்பா முதலில் வந்து கையக் கொடு, ரொம்ப நல்லா கேம் விளையாடி இருக்க.. நீ ரொம்ப பெரிய படம் எல்லாம் பண்ண வேண்டும் என்று என்னிடம் கூறினார். 

என்னுடைய அம்மாவும் என்னை கட்டிப்பிடித்து முத்தம் தந்து சீக்கிரமா படம் பண்ணு.. அத நாங்க பாக்கணும் என்று சொன்னாங்க  என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement