தமிழ் சினிமா, ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசப்படுபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவரது நேர்மையான பேச்சு மற்றும் குடும்ப விவகாரங்களில் அவர் பகிரும் தைரியமான கருத்துகள் மூலம் பல்லாயிரக்கணக்கான நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில் தனது குடும்பம், சொத்து குறித்து ரொம்ப திறந்த மனதோடு பேசியிருந்தார். அந்த உரையாடல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இந்த பேட்டியில் வனிதா, "என்னுடைய சொந்தக்காரங்க எல்லாரும் என் கூட பேசிட்டு தான் இருக்காங்க. 6,7 பேர் தான் ஓவர் ஆக்சன் பண்ணிட்டு சுத்திட்டு இருக்காங்க. ஊருக்கெல்லாம் போய் உபதேசம் பண்றாங்க. நீங்க அப்புடி இருக்கீங்களா என்று பாருங்க." என்று தெரிவித்திருந்தார்.
இது அவரின் குடும்பத்தில் சிலர் தன்னை விலக்கியிருப்பதாகவும், பெரும்பாலான உறவினர் இன்னும் அவருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெளிவாகச் சொல்வது போலவே இருக்கிறது.
மேலும், “வருமான ரீதியாக நான் இன்னும் அன்றாடம் காட்சி தான். சின்ன வயசில இருந்தே பணம், காசு எல்லாம் பாத்தாச்சு. அதனால் சொத்து எல்லாம் எனக்கு பெரிய விஷயமா படல.” எனவும் கூறியிருந்தார்.
வனிதா கூறிய இந்த நேர்காணல், ஒரு உண்மையான வாழ்க்கையின் பிரதிபலிப்பாகத் திகழ்கிறது. சொத்து, சம்பாதிப்பு, பிரச்சனை, உணர்ச்சி, உறவு இவையனைத்தையும் கடந்த ஒரு குரலாக காணப்படுகின்றது.
Listen News!