• Apr 16 2026

உச்சக்கட்ட வன்மத்தில் திரியும் ஹவுஸ்மேட்ஸ்.. தூபம் காட்டிய பிக் பாஸ்.? பகிர் அறிவிப்பு

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.  இறுதியாக கடந்த வாரம் பிக் பாஸ்  வீட்டில் இருந்து பிரஜின் எலிமினேட் ஆகி வெளியே சென்று  இருந்தார். 

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 65 நாட்களைக் கடந்த  நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. 

அதில் இந்த வாரம் பிக் பாஸ் இல்லம்  ஒரு வழக்காடு மன்றமாக மாறவுள்ளது. அதன்படி கொடுக்கப்பட்ட டாஸ்கை கனி திரு வாசிக்கின்றார். 

அதில்  போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கார்ட் கொடுக்கப்படுகின்றது. அதில் போட்டியாளர்கள் தங்களுடைய மூன்று வழக்குகளை பதிவு செய்யலாம். 


மேலும் உங்களுடைய வழக்கு தேர்வு செய்யப்பட்டால் அவர்களுக்கு அறிவிப்பு  கிடைக்கும் என டாஸ்க்கை வாசித்து முடிக்கின்றார் . இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

 எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் இந்த டாஸ்க்  போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் நிலையில்  தற்போதுள்ள போட்டியாளர்கள் இதனை எப்படி கையாள போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


  

Advertisement

Advertisement