• Aug 06 2025

"ராமாயணா " படத்தில் ஏ ஆர் ரஹ்மானுடன் இணையும் ஹாலிவுட் இசை மாஸ்டர்..!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்களுள் ஒன்றாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம், தற்போது ஒரு சர்வதேச அளவிலான மேஜிக் மாற்றத்தை உருவாக்க இருக்கிறது. இந்தப் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசை மாஸ்டர் ஹான்ஸ் ஸிம்மர் இணைந்து இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ரன்பீர் கபூர், யாஷ், மற்றும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் தென்னிந்திய மற்றும் ஹிந்தி சினிமாவின் முக்கியமான கலாசாரங்களை மையமாகக் கொண்டு உருவாகுகிறது. மேலும் ஹான்ஸ் ஸிம்மர் இன்டர்ஸ்டெல்லர், தி லயன் கிங், டார்க் நைட், இன்செப்ஷன் போன்ற உலக புகழ்பெற்ற படங்களுக்கு இசையமைத்தவர். அவரும், இந்தியாவின் இசை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானும் இணையும் இந்த கூட்டணி சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இந்த கூட்டணி மூலமாக இந்திய சினிமா சர்வதேச தரத்தில் இசை தரமான ஒரு முயற்சி எடுத்துள்ளது என சொல்லப்படுகிறது. 'ராமாயணா' திரைப்படம் இசை மற்றும் கதைக்களத்தில் வித்தியாசமான புரட்சி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement