• Jun 14 2026

ஜிம்மில் ஹீரோயின் — வீட்டுக்கு செல்லும் போது கோமாளி! இந்திரஜாவின் பரிதாப வீடியோ வைரல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மாள் கதாபாத்திரத்தில் அறிமுகமான இந்திரஜா, விருமன், அகத்தியா, கூரன், தங்க நட்சத்திரம் TN 2026 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜீ தமிழ் சர்வைவல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி படப்பிடிப்பில் மயங்கி விழுந்து 46 வயதில் காலமான தந்தை ரோபோ ஷங்கரை இழந்த வலியிலும், இந்திரஜா தனது பயணத்தை தொடர்ந்து வருவது ரசிகர்களை நெகிழ வைக்கிறது. 

ரோபோ சங்கர் போலவே தந்தையின் நகைச்சுவை குணத்தை தொடர்ந்து வாழ வைப்பதே தனது கடமை என்பதை நிரூபித்து வருகிறார்.


இந்த நிலையில், இந்திரஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், ஜிம்மில் வர்க்அவுட் செய்யும்போது எப்படி இருப்பேன் என்றும், அதன் பிறகு வீட்டுக்கு எப்படி தள்ளாடி போவேன் என்றும் காமெடியாக சித்தரித்துள்ளார்.  

ரோபோ ஷங்கரின் மகளாக பிறந்து சினிமாவில் தனது இடத்தை தானே உருவாக்கிக் கொண்ட இந்திரஜா ஷங்கர், தற்போது தனது நகைச்சுவையான ஜிம் வீடியோவால் இணையத்தை கலக்கி வருகிறார்.

 


Advertisement

Advertisement