• Jul 10 2025

கையில் பிஸ்கட்டுடன் கியூட்டா ரியாக்ஷன் கொடுக்கும் பூஜா ஹெக்டே.! வைரலாகும் வீடியோ இதோ.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் அழகு மற்றும் நடிப்பு இணைந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் சிறந்த வாய்ப்புகளைப் பெற்றிருக்கும் இவர், தமிழில் 'முகமூடி' (2012) மூலம் அறிமுகமானார். அதன் பிறகு விஜயுடன் இணைந்து நடித்த ‘பீஸ்ட்’ படத்தில் இவர் கலக்கியிருந்தார்.


தற்போது ‘ஜனநாயகன்’ எனும் மாபெரும் அரசியல் சாதனை படத்தில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். இப்படம் அடுத்த ஆண்டு 2026ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பூஜா ஹெக்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. இது எந்த சினிமா சம்பந்தமான விடயமும் இல்லை.


பூஜா ஹெக்டே வெளியிட்ட வீடியோவில், அவர் நின்று கொண்டு ஒரு டீ கப்பை கையில் வைத்திருப்பதோடு, பார்லே-ஜி பிஸ்கட்டை அதில் நனைத்து மெதுவாக சாப்பிடுகிறார். அதே சமயம் அவர் கூறும் வார்த்தைகள் தான் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டது.

“சில விஷயங்கள் நம்மை வீட்டில் இருப்பது போலவே உணர வைக்கும். அதில் ஒன்று தான், பார்லே-ஜி பிஸ்கட்டை டீ-யில் நனைத்து சாப்பிடுவது.” என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருவதுடன் அதிகளவான பார்வையாளர்களையும் பெற்று வருகின்றது.

Advertisement

Advertisement