அஜித்குமார் ஆதிக் இயக்கத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகிய "குட் பேட் அக்லி " திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாகிய அடுத்த நாளே இயக்குநர் மீண்டும் இந்த கூட்டணி நிச்சயமாக இணையும் என கூறியிருந்தார். அது போல தற்போது அஜித்தின் 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது உறுதியாகியுள்ளது.
மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த ஆண்டு கோடையில் படத்தை வெளியிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிகரித்து வருவதுடன் அஜித் கார் ரேஸிங் முடித்து வந்த கையுடன் படத்தில் நடிக்க ஆரம்பிக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!