• May 15 2026

சிலம்பரசன் - சந்தானம் காம்போவில் உருவாகும் புதிய படம்.. வெளியான சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு புதிய கூட்டணி உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல நடிகர் சிலம்பரசன் தனது 51-வது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் வடசென்னையை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் கதையாக உருவாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


அத்துடன், சிலம்பரசன் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாகும் தகவல் லீக்காகி உள்ளது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த திரைப்படத்திற்கு காட் ஆஃப் லவ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது மற்றும் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த புதிய படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, சிலம்பரசனுக்கு ஜோடியாக மிருணாள் தாகூரை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலம்பரசனின் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம், ரசிகர்கள் மத்தியில் பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சிலம்பரசன்-சந்தானம் கூட்டணி உருவாகும் என்ற எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

Advertisement

Advertisement