• Apr 16 2026

அடேங்கப்பா.! சத்தமில்லாமல் நடந்து முடிந்த ஸ்பைடர் மேன் ஜோடியின் திருமணம்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் Tom Holland, உலகளவில் ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் அசாதாரண இடத்தை பெற்றுள்ளார். இவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவரது நகைச்சுவை, உயிருள்ள நடிப்பு மற்றும் ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் டாம் ஹொலண்டுக்கு ஜோடியாக நடித்த Zendaya, அவரது நடிப்பின் தனிமை மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களின் மனதில் நின்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகளின் போது அவர்களின் நட்பும் காதலும் வளர்ந்தது. 


கடந்த சில ஆண்டுகளாக, ஜெண்டயா மற்றும் டாம் ஹொலண்ட் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதல் புகைப்படங்கள், செய்தித்தாள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவிவந்தது. 

சமீபத்தில் வெளியாகிய தகவல்களின் படி, ஜெண்டயா – டாம் ஹொலண்ட் ஜோடிக்கு திருமணம் கடந்த மார்ச் 1, 2026 அன்று நடைபெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது. எனினும் தற்போது வரை அவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவரவில்லை.

Advertisement

Advertisement