தமிழ் தொலைக்காட்சியின் எமோஷனல் ஹிட் சீரியல்களில் ஒன்றான "மகாநதி" சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் சுவாமிநாதன். அதில் அவர் நடித்த ‘விஜய்’ என்ற கதாப்பாத்திரம் நம்ம வீட்டு பையனாகவே பரிணமித்து, பெண் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது.
இப்போது அந்த நடிகர், சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு முதன்முறையாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார். அது மட்டுமல்ல, இந்த படம் கன்னடத்தில் உருவாகி, தமிழ் உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
'கமரோட்டு 2' எனும் பெயரில் உருவாகியுள்ள இந்த படம், ஒரு க்ரைம் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சுவாமிநாதன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இது அவரது முதலாவது முயற்சியாக இருப்பதனால் ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
படத்தில் முக்கிய வேடத்தில் பிரியங்கா உபேந்திரா இணைந்துள்ளார். இவர் தமிழில் ‘ராஜா’ என்ற திரைப்படத்தில் அஜித் குமாருடன் ‘ப்ரியா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவர் ஒரு கடுமையான, அதிகார மிக்க பொலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இது அவருக்கு கதையின் முக்கிய திருப்பங்களை உண்டாக்கும் ஒரு கதாப்பாத்திரமாகவே அமைந்துள்ளது.
Listen News!