• Apr 26 2025

சூர்யாவிற்கு வந்து குவியும் பட வாய்ப்புகள்..! அடுத்த இயக்குநர் இவர் தான்...

Mathumitha / 3 months ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு வெளியாகிய கங்குவா திரைப்படம் அதிக சத்தம் ,கதை சரியில்லை ,முதல் அரைபாகம் சம்பந்தமில்லாமல் உள்ளது போன்ற ஒரு சில விமர்சனங்களுக்கு உள்ளாகி படம் படு தோல்வியை சந்தித்தது. இருப்பினும் சூர்யா அப் படத்தில் மிகவும் அருமையாக நடித்திருந்தார்.இந்நிலையில் தொடர்ந்து பல ப்ரொஜெக்ட்களில் கமிட்டாகி வருகின்றார்.


தற்போது வெற்றிமாறன் ,கார்த்திக் சுப்புராஜ் ,rj பாலாஜி இயக்கங்களில் "ரெட்ரோ","வாடிவாசல் ", "சூர்யா 45" என பல படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர் அடுத்து சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற லக்கி பாஸ்கர் திரைப்பட இயக்குநர் வெங்கி அட்லூரியுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இயக்குநரிடம் கதை கேட்ட சூர்யா படத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டுள்ளதாகவும் இப் படத்தினை சித்தாரா என்டெர்டெய்மென்ட் எனும் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.கூடிய சீக்கிரத்தில் படப்புடிப்புகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement