• May 22 2025

ஜிவி பிரகாஷ் - சைந்தவி பிரிவுக்கு இதுதான் காரணமா? அதிர்ச்சியில் இரு குடும்பத்தினர்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி பிரிவதாக நேற்று தங்களது சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் இந்த பிரிவிற்கு என்ன காரணம் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இதையறிந்து இரு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஆகிய இருவரும் சிறு வயதில் இருந்தே பழகியவர்கள் என்பதும் கடந்த 2013 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 11 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வந்த ஜீவி பிரகாஷ் சைந்தவி தம்பதி திடீரென தங்களது பிரிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மட்டும் இன்றி இரு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.



ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்தவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது என்றும் ஆனால் அவர் நடிக்க தொடங்கிய பிறகு தான் தம்பதிகள் இடையே பிரச்சனை வந்ததாகவும் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பதை சைந்தவி விரும்பவில்லை என்றும் நடிப்பு வேண்டாம் இசையமைப்பு மட்டும் பாருங்கள் என்று அவர் பலமுறை கூறியதை ஜிவி பிரகாஷ் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த பிரச்சனை தான் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஒரு கட்டத்தில் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஜி வி பிரகாஷ் நடிகர் ஆனது தான்  இந்த தம்பதிகள் பிரிந்ததற்கு காரணம் என்றும் இருவருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி பிரிவு அவர்களது பெற்றோர்களை மிகப்பெரிய மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளதாகவும் மீண்டும் இருவரை சேர்த்து வைக்க சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement