• Apr 27 2025

செந்திலுக்கு அடிச்சதால தான் இந்த நிலைமைக்கே வந்தான்..!கவுண்டமணி பகிர்ந்த உண்மை..!

subiththira / 8 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி உலகில் மிரளவைத்தவர்கள் என்றால், எந்த சந்தேகமும் இல்லாமல் கவுண்டமணி மற்றும் செந்தில் ஜோடியே முதலில் அனைவரது மனதிலும் நினைவில் வருபவர்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த சீன்கள் ரசிகர்களை கண்ணீர் விடும் வரை சிரிக்க வைத்திருக்கின்றன. எத்தனையோ காலத்திற்கு, தமிழ் மக்களின் மனதில் அழியாத இடத்தை பிடித்த இந்த ஜோடி பற்றிய ஒரு உண்மையான தகவல் சமீபத்தில் வெளிவந்துள்ளது.


சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவுண்டமணி, அவரது நெருங்கிய நண்பரான செந்தில் பற்றிய சில உண்மைகளைக் கூறி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். அதன்போது கவுண்டமணி கூறியது, "செந்தில் என் கூட பிறந்த தம்பி மாதிரி தான். அவனுக்கு படம் நடிக்கத் தெரியும். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவன் ரொம்ப வெகுளி. நான் படத்தில் செந்திலை அடிக்கலைனா, அவனுக்கு வேலையே கிடைத்திருக்காது. இப்போ இந்த நிலைமைக்கு கூட வந்திருக்க மாட்டான்!" என்றார்.

செந்திலும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த சினிமாக்கள் எண்ணற்றவை. அந்தப் படங்களில், செந்திலின் குறும்பும், கவுண்டமணியின் வசனங்களில் உள்ள நக்கலும் மக்கள் மத்தியில் அவர்கள் இருவரையும் எப்பொழுதும் பாசத்துடன் நினைத்துப் பார்க்க வைத்தது. படங்களில் பார்ப்பது போலவே, அவர்களுக்கு இடையேயான நட்பு நிஜ வாழ்க்கையிலும் மிகுந்த ஆழமுள்ளதாக காணப்பட்டது.

Advertisement

Advertisement