• Jun 14 2026

பாக்கியாவிடம் சரணடைந்த கோபி.. பாக்கியா கொடுத்த பதிலடி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி  உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் கோபி வாக்கிங் போய்க் கொண்டிருக்க, பாக்கியாவும் வருகிறார். இதன் போது கோபி பாக்யாவிடம் சென்று, அங்கு அம்மாக்கும் அந்த அம்மாவுக்கும் சண்டை. அதனால நீ அம்மாவ வீட்டுக்கு கூட்டி போறியா? அம்மா நீ சொன்னா வருவாங்க என்று சொல்ல, அதற்கு பாக்கியா முடியாது பாஸ் என சொல்லி செல்கிறார்.

இதை தொடர்ந்து பாக்கியா, ஈஸ்வரியை கோவிலில் சந்தித்து அவருக்கு சாப்பாடு கொடுக்கிறார். இதன் போது ஈஸ்வரி வேண்டாம் என்று சொல்ல, அப்படி என்றால் இங்கே வைத்துவிட்டு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு பாக்கியா எழுந்து செல்கிறார்.


இதை அடுத்து பாக்கியா மறுபக்கம் சென்றதும் அந்த சாப்பாட்டை  எடுத்து ருசித்து சாப்பிடுகிறார் ஈஸ்வரி. இதனை பாக்கியா பார்த்து கண் கலங்குகிறார்.

அத்துடன் நீங்க எங்க வீட்டுக்கு வந்துருங்க அத்தை என்று கேட்க, அது எல்லாம் முடியாது. நாள் வந்தால் கோபி கஷ்டப்படுவான் என்று சொல்லுகிறார் ஈஸ்வரி ,இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement