• Jun 14 2026

மாமனார் மருமகள்களுக்கு இடையே வெடிக்கும் பூகம்பம்! அதிர்ச்சியில் கோமதி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் பாண்டியன் குடும்பத்தார் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, இது எல்லாம் நான் தான் சமைச்சன் என்று தங்கமயில் சொல்கிறார். இதன் போது சாப்பாடு ரொம்ப பிரமாதமா இருக்கு என்று பாண்டியன் பாராட்ட, இத்தனை நாளா நானும் தான் சமைத்தேன் என்று கோமதி சொல்ல, 10 பேருக்கு ஒத்த ஆள சமைக்க உங்களால முடியுமா? ஏம்மா ராஜி, மீனா உங்களால முடியுமா என்று எல்லாரையும் அடக்குகிறார் பாண்டியன்.

இதை அடுத்து இந்த வீட்டில மாமியார் மருமகளுக்கு இடையில பிரச்சனை வராது. மாமனார் மருமகளுக்கு இடையில தான் பிரச்சனை வரும் என்று செந்தில் கதிரிடம் அவரது மாமா பேசிக் கொண்டிருக்கிறார்.


இதைத்தொடர்ந்து கோமதி, ராஜி, மீனா கிச்சனில் பேசிக்கொண்டிருக்க, கோமதி இனிமேல் அவர் என்ன தவற அந்த தங்க மயிலை கூப்பிடட்டும் என்று சொல்லும்போதே, பாண்டியன் ஏன்மா தங்கமயில் என்று தங்கமயிலை கூப்பிடுகிறார். 

தங்கமயில் சிரித்துக் கொண்டு வர, கோமதி அதிர்ச்சியாக நிற்கிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. இனிமேல்  இந்த குடும்பத்தில் என்ன நடக்குது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement