• Aug 28 2025

Caravanக்குள் போறது எல்லாம் நீண்டநாள் கனவு.! செந்தில் -ராஜலட்சுமியின் நெகிழ்ச்சியான பதிவு!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டீவியின் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் பார்வையாளர்களின் மனதில் இடம்பிடித்த செந்தில் – ராஜலட்சுமி ஜோடி, தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு உணர்ச்சி மிகுந்த பதிவால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர். பல்லாயிரக்கணக்கான கமெண்ட்ஸ், லைக் மற்றும் ஷேர்கள் மூலம் அந்தப் பதிவு இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது.


செந்தில் மற்றும் ராஜலட்சுமி இணைந்து தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அந்த பதிவில், "Caravan எப்டி இருக்கும். ஒரு தடவயாவது உள்ள போய் பாத்திரனுமேன்னு நெனச்சது ஒரு காலம். இப்ப எங்க பெயர் போட்டு எங்களுக்குன்னு ஒரு Caravan.”


 "உண்மையாவே "Goosebumps moment". நம்ம வேலைய நேசிச்சு செஞ்சிட்டு இருந்தால் நம்ம வாழ்க்கை ஒரு நாள் நம்ம நினைச்ச மாதிரி.. இல்ல, நம்ம நினைச்சதை விட சூப்பரா மாறும் அப்படிங்கிறதுக்கு இதுவும் ஒரு உதாரணம் . இந்த வாழ்க்கையை தந்த இறைவனுக்கும் , மக்களுக்கும் ,விஜய் டீவி சூப்பர் சிங்கர் மேடைக்கும் நன்றி." என்றும் அந்த பதிவில் கூறியிருந்தனர். இந்த வீடியோ தற்பொழுது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement