• May 18 2025

அந்த படத்தை குழந்தைகளோடு சென்று பாருங்கள்! சூர்யா பரிந்துரைத்த படம் எது தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கவின் நடித்த ஸ்டார் படம் வெளியான நிலையில், ஹிந்தியில் ஜோதிகா நடித்த ஸ்ரீகாந்த் படமும் இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் ஜோதிகா, ராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இதனை துஷார் ஹிரநந்தனி என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், ஜோதிகா நடித்த ஸ்ரீகாந்த் படம் பற்றி நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், ஸ்ரீகாந்த் திரைப்படம் ஒரு அழகான ரோலர் போஸ்டர் படம். அது நம்மை சிரிக்க வைக்கும். ஒரு நபர் வாழ்க்கையில் எப்படி பல விஷயங்களை சாதிக்க முடியும் என்பதை உணர வைக்கும். ராஜ்குமார் ராவ் அவரின் நடிப்பும், துஷார் ஹிரநந்தனி அவரின்  இயக்கம் ஆகியவை சிறப்பாக உள்ளது. இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று  தெரிவித்துள்ளார்.


இதை தொடர்ந்து ஜோதிகாவின் நடிப்பு பற்றி கூறியபோது,  நீங்கள் தெரிவு செய்து நடிக்கும் படங்கள் எப்போதுமே சிறப்பு வாய்ந்தவையாக இருக்கும். உங்களின் நடிப்பு அதை உண்மையாகின்றது என்று கூறியுள்ளார். மேலும் இது ஒரு முக்கியமான படம் அனைவரும் குழந்தைகளோடு சென்று திரையரங்கில் பாருங்கள் என்றும் பரிந்துரைத்துள்ளார் சூர்யா.


Advertisement

Advertisement