• Jul 03 2025

ரன்பீர்- சாய் பல்லவியின் நடிப்பில் உருவான "ராமாயணா" படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வைரல்..

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

இந்திய புராணங்களின் காவியத்தை உலக தரத்தில் திரைபடமாக கொண்டு வர தயாராகும் முயற்சியில், “ராமாயணா” திரைப்படம் தற்போது மிகப்பெரிய பேசுப்பொருளாகி வருகின்றது. நித்தேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம், ஹிந்தி சினிமாவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க படமாக உருவாகும் என ரசிகர்களும் விமர்சகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.


இந்நிலையில், இப்படத்தின் "Glimpse" வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் குறுகிய நேரம் கொண்ட இந்த வீடியோவை பார்த்தபடியே ரசிகர்கள் "Wow!" எனக் கூறும் அளவுக்கு வியப்பில் உள்ளனர். ஹாலிவூட் தரத்தில் உருவாகிய காட்சிகள், துல்லியமான கிராஃபிக்ஸ் வேலை, பிரமாண்டமான கமரா ஆங்கிள்கள் ஆகியவை இதன் முக்கிய பலமாக உள்ளன.

இந்த 'ராமாயணா' படத்தில் , ரன்பீர் கபூர் ராமராக, சாய் பல்லவி சீதாவாக நடிப்பதுடன் இவர்களுடன் யஷ் ராவணராக, சன்னி தியோல் போன்றவர்களும் நடித்துள்ளார்கள். இந்திய VFX துறையில் முன்னணியில் உள்ள DNEG நிறுவனம் இப்படத்தின் க்ராஃபிக்ஸ் பணியை செய்துள்ளது. 


அத்துடன் இப்படத்தின் முதலாவது பாகம் 2026ம் ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாவது பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement