'பேச்சிலர்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா பாரதி. அந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடித்த அவர், தனது இயல்பான நடிப்பும், கவர்ச்சியான தோற்றமும் மூலம் ரசிகர்களின் கவனத்தை முதல் படத்திலேயே ஈர்த்தார்.

திரைப்படங்களைத் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா பாரதி, அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஸ்டைலிஷ் மற்றும் கவர்ச்சியான லுக்கில் அவர் தோன்றியுள்ள இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளன.
இந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும், கமெண்ட்ஸ்களையும் குவித்துள்ளன.
திரைப்பட வாய்ப்புகள் எப்படி இருந்தாலும், தனது சமூக வலைத்தள பதிவுகள் மூலம் ரசிகர்களுடன் இணைந்து இருக்கும் திவ்யா பாரதி, அவர்களுக்காக தொடர்ந்து புதிய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதன் மூலம், அவர் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!