• May 16 2026

உங்க தம்பிக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க! - மேடையில் உருகிய தளபதி விஜய்..

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழக அரசியல் களம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய் தனது கட்சியான தவெக சார்பில் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதில் அவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு முக்கிய தொகுதிகளில் போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.


பெரம்பூர் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்ற தகவல் முன்பே வெளியாகி இருந்தாலும், திருச்சி கிழக்கு தொகுதி தேர்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது விஜயின் அரசியல் யோசனைகளில் புதிய மாற்றங்களை காட்டுகிறது என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில், வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசிய உரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. “உங்க தம்பிக்கு, உங்க பிள்ளைக்கு... ஒரே ஒரு வாய்ப்புக் கொடுங்க. தயவு செய்து விசில் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்க. யாரு வேட்பாளராக இருந்தாலும், வேட்பாளர் வேற, விஜய் வேற என்று நினைக்காதீங்க. நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.” என்று அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

அவரது இந்த உரை ரசிகர்கள் மற்றும் கட்சியினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை முன்னிட்டு விஜயின் இந்த அரசியல் நகர்வு மற்றும் பேச்சு, தமிழக அரசியல் சூழலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisement

Advertisement