• Aug 07 2025

வித்தியாசமாக சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் சூர்யா இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கின்றார். இந்த மாதம் இவரது பிறந்தநாளை முன்னிட்டு பல ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. இதைவிட சூர்யா அகரம் அறக்கட்டளை மாணவர்களுக்கு பிரமாண்ட நிகழ்வு ஒன்றினையும் ஒழுங்குபடுத்தியுள்ளார். 


இந்நிலையில் தற்போது சேலம் வடக்கு மாவட்ட சூர்யா தலைமை ரசிகர் மன்றத்தினர் அவரின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சமூகப் பொறுப்புடன் ரத்ததானம் வழங்கியுள்ளனர். பல ரசிகர்கள் இதில் கலந்து கொண்டு நற்செயலுக்கான முன்னோடியாக தங்களை நிலைநிறுத்தியுள்ளனர். இது போன்ற சமூகநல நிகழ்வுகள் மற்ற ரசிகர்களுக்கும் ஊக்கத்தையும் சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


அறம் வளர்த்த நாயகன் என்றழைக்கப்படும் சூர்யாவின் பாதையில் ரசிகர்களும் சமூக சேவையில் ஈடுபடுவது பெருமைக்குரியது என்றும், இது போன்ற நடவடிக்கைகள் தொடர்க என சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement