கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் தான் 'ரெட்ரோ'. இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்கு நடிகர்கள் பெற்றுக் கொண்ட சம்பளம் எவ்வளவு என்ற தகவல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
மிஷ்கினின் இயக்கத்தில் "முகமூடி" திரைப்படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. இதனை அடுத்து தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு சினிமாவில் நடித்து தெலுங்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் தமிழில் நடித்துள்ளார். அப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி அளிக்கவில்லை .
பின் "ரெட்ரோ" படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் காதலும், ஆக்ஷனும் கலந்து வித்தியாசமான கதைகளத்துடன் நடித்துள்ளார். இப்படம் மே 1 திகதியிலிருந்து இன்றுவரை மொத்தமாக 70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது .இப்படத்தில் நடிப்பதற்கு சூர்யா 40 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாகவும், ஹீரோயினாக நடித்த பூஜா ஹெக்டே 5கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Listen News!